தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, பின்னர் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்தது. நேற்று இரவு 9 மணி முதல் தொடங்கிய காற்றின் தாக்கம் அதிகாலை 3 மணிக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் லேசான காற்றே வீசியது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நீலகிரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் கொடைக்கானல் (சிறுமலை பகுதிகளுக்கு மட்டும்) உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.