Home /News /tamil-nadu /

'தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் மிதமான மழை பொழியும்' - சென்னை வானிலை ஆய்வு மையம்

'தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் மிதமான மழை பொழியும்' - சென்னை வானிலை ஆய்வு மையம்

கனமழை

கனமழை

TN Rain : மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 - 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 17, 18 ஆகிய தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)  :

    • மேல் பவானி (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • திருப்பத்தூர் (திருப்பத்தூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), நடுவட்டம் (நீலகிரி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), கீழச்சேர்வை (கடலூர்) தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), ஹாரிசன் எஸ்டேட் சேரங்கோடு (நீலகிரி) தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • திருத்தணி (திருவள்ளூர்), நட்ராம்பள்ளி (திருப்பத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பூண்டி (திருவள்ளூர்), திருவள்ளூர் (மாவட்டம் திருவள்ளூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • தேவாலா (நீலகிரி), தொழுதூர் (கடலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), எறையூர் (பெரம்பலூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), காட்பாடி (வேலூர்), க்ளென்மார்கன் (நீலகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), பார்வூட் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), லக்கூர் (கடலூர்), சந்தியூர் KVK (சேலம்) தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.


    ALSO READ | 'நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்வது தீர்வு ஆகாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    சிதம்பரம் (கடலூர்), தம்மம்பட்டி (சேலம்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), வேலூர் (வேலூர்), அம்முண்டி (வேலூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), வீரகனூர் (சேலம்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), புவனகிரி (கடலூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), டிஜிபி அலுவலகம் (சென்னை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), அம்பத்தூர் (திருவள்ளூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), தாம்பரம் (செங்கல்பட்டு), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), தருமபுரி PTO (தருமபுரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை), எம்ஜிஆர் நகர் (சென்னை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), பெலாந்துறை (கடலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), மங்களபுரம் (நாமக்கல்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), பெரியார் (தேனி), செங்கம் (திருவண்ணாமலை), ஓசூர் (கிருஷ்ணகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), தேக்கடி (தேனி), ACS மருத்துவக் கல்லூரி ARG (காஞ்சிபுரம்), குட் வில் பள்ளி, வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), திரூர் KVK (திருவள்ளூர்), விரிஞ்சிபுரம் KVK (வேலூர்), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    17/07/2022 - 18/07/2022 ஆகிய தேதிகளில் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 - 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in இணையதளத்தை காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai Rain, Heavy rain

    அடுத்த செய்தி