சென்னையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

உள் தமிழக மாவட்டத்தில் கடந்த சில நாட்களை விட இன்று வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: June 30, 2019, 1:24 PM IST
  • Share this:
சென்னையில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் உள் தமிழக மாவட்டத்தில் கடந்த சில நாட்களை விட இன்று வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.


இதேபோல் சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு. சென்னையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

First published: June 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading