தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

news18
Updated: April 16, 2019, 2:40 PM IST
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
மழை
news18
Updated: April 16, 2019, 2:40 PM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு உள் கர்நாடகாவில் இருந்து உள் தமிழகம் வழியாக குமரி முனை வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின்

ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் தமிழகத்தில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் வேலூர்,திருவண்ணாமலை,
தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடியில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகப்பட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.Also watch

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...