இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

news18
Updated: April 12, 2019, 4:58 PM IST
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
மழை
news18
Updated: April 12, 2019, 4:58 PM IST
வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வெப்பநிலையை பொருத்த வரை வேலூர்,
திருவண்ணாமலை, திருப்பூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், பெரம்பலூர்
காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...


Also watch


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...