கோவை, சேலம் உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

கோவை, சேலம் உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 2, 2019, 1:40 PM IST
  • Share this:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 7 செ.மீ மழையும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சின்னக்கல்லார் பகுதியில் 5 செ.மீ மழையும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.Loading...

Also watch

First published: October 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...