தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: October 3, 2019, 1:49 PM IST
  • Share this:
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மேலும் தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையாக 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.



Loading...

Also watch

First published: October 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...