மணப்பாறையில் மிதமான மழைக்கு வாய்ப்பு... மீட்புப் பணியில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளோம் - வானிலை ஆய்வு மைய இயக்குநர்

மணப்பாறையில் மிதமான மழைக்கு வாய்ப்பு... மீட்புப் பணியில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளோம் - வானிலை ஆய்வு மைய இயக்குநர்
  • News18
  • Last Updated: October 28, 2019, 2:44 PM IST
  • Share this:
சிறுவன் சுர்ஜித் இருக்கும் இடத்தில் மிதாமான மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், தென்மேற்கு வங்ககடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை குமரி கடல் பகுதியில் நகர்ந்து வலுப்பெறும். இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு பகுதி மற்றும் வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்

அதேபோல குமரி ,நெல்லை, தூத்துக்குடி, புதுகோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்கில் கனமழை பெய்யும். தெற்கு கேரள, தென் தமிழக கடல் பகுதி, லட்சத்தீவு கடற்பகுதிகளில் அக்டோபர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளார்


மேலும் அடுத்த இரண்டு தினங்களுக்கு மணப்பாறையில் மிதமான மழை பெய்ய கூடும் என்றும் இது தொடர்பாக சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லம், குமரி மாவட்டம் கொட்டாரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
First published: October 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...