• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை பாரிமுனையில் எல்.ஐ.சி கட்டிடத்தில் தீ விபத்து!

சென்னை பாரிமுனையில் எல்.ஐ.சி கட்டிடத்தில் தீ விபத்து!

எல்.ஐ.சி கட்டிடத்தில் தீ

எல்.ஐ.சி கட்டிடத்தில் தீ

எல்.ஐ. சி.யின் 5 வது மாடியில் உள்ள பல முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன.

  • Share this:
    சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள எல்.ஐ.சி கட்டிடத்தில் இன்று காலை 5 :30 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

    மின்கசிவு ஏற்பட்ட பாரிஸ் கார்னர்க்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், ஆகிய இடங்களில் இருந்து வந்த 7 தீயணைக்கும் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

    எல்.ஐ.சி. கட்டிடத்தின் நான்காவது மாடியில் பற்றிய தீயானது மற்ற இடங்களுக்கும் பரவ துவங்கியது. விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அருகில் இருக்கும் குடியிருப்புகள், மற்றும் கடைகளுக்கு தீ பரவாத வண்ணம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த விபத்தில் எல்.ஐ. சி.யின் 5 வது மாடியில் உள்ள பல முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Also see...







    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: