ஒரு மாதம் பரோல் கேட்டு முருகன், நளினி முதலமைச்சருக்கு கடிதம்

கோப்புப் படம்

தந்தைக்கு சடங்குகள் செய்யவும், தாயை கவனித்து கொள்ளவும், 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று முருகன், நளினி இருவரும் தனித்தனியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

 • Share this:
  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி, முருகன் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

  இந்நிலையில் நளினி, முருகன் ஆகியோர் தனித்தனியாக வேலூர் மத்திய சிறையில், சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினியிடம் நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர், உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும்படி கடிதம் வழங்கினார்.

  நளினி எழுதியுள்ள அந்த கடிதத்தில், “சென்னையில் உள்ள தனது தாயார் பத்மா (வயது 81) முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் அருகில் இருந்து கவனித்து கொள்ளவும், இலங்கையில் வசித்த தனது மாமனாரும், முருகனின் தந்தையுமான வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆகிறது. அவருக்கு சடங்குகள் செய்ய வேண்டி உள்ளது. எனவே எனக்கும், கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  முருகனின் எழுதியுள்ள கடிதத்தில், “தந்தை வெற்றிவேல் கடந்தாண்டு இறந்தபோது இறுதிசடங்கு செய்வதற்காக பரோலில் செல்ல அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை. தற்போது தந்தை இறந்து ஓராண்டுகள் ஆகிறது. எனவே அவருக்கு சடங்குகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதாக நளினி, முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

  அந்த கடிதம்ங்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு தபால் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

  Must Read : அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு- காரணம் என்ன? சிசிச்சை முறை என்ன?

   

  அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் பரோல் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: