ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க” .. ட்வீட் செய்த கமல்ஹாசன்!

“ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க” .. ட்வீட் செய்த கமல்ஹாசன்!

கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின்

கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின்

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி - மு.க.ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் தோழமைக் கட்சிகளை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி இருந்தார். அதுபோலவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவை அறிவிப்பதாக கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இதுகுறித்து இன்று காலை 11.30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன், ராகுல்காந்தியுடன் உரையாடலும் நிகழ்த்தி இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கமல்ஹாசனின் இன்றைய ஆலோசனைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். காங்கிரஸ் வெற்றிக்கு தானும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலத்தையும் நியமித்தார்.

இதனையடுத்து இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி தெரிவித்தார். அவர் பதிவிட்டிருந்த ட்விட்டில், “நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ஒன்று கூடுவோம் முதலமைச்சர் ஸ்டாலின், வென்று காட்டுவோம் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாடு வாழ்க” என குறிப்பிட்டு பதிலளித்தார். இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் பயணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

First published:

Tags: CM MK Stalin, Erode Bypoll, Erode East Constituency, EVKS Elangovan, Kamal Haasan