"மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்பது உட்பட 5 வாசகங்கள் வெங்கையா நாயுடு திறந்து வைத்த கலைஞர் சிலையில் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறையும், திமுகவின் தலைவராக ஐம்பது வருடங்களாக பொறுப்புவகித்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய பிரதான சாலையான அண்ணா சாலையின் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தையொட்டி, அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார்.
அண்ணா அறிவாலயம், திருச்சி, ஈரோடு, தூத்துக்குடியைத் தொடர்ந்து அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு அருகிலேயே கலைஞர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ கலைஞரின் வெண்கலச் சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தி சிலையின் கீழே 5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை,
"வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்"
"அண்ணா வழியில் அயராது உழைப்போம்"
"ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்"
"இந்தி திணிப்பை எதிர்ப்போம்"
"மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி"
இந்த 5 வாசகங்களும் சிலையின் கீழே பொறிக்கப்பட்டுள்ளன.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.