• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காற்றுமாசு குறித்து அக்கறையிருந்தால் வாகனங்களை புறக்கணியுங்கள், குழந்தைகள் பட்டாசு வெடிக்கட்டும் - சத்குரு

காற்றுமாசு குறித்து அக்கறையிருந்தால் வாகனங்களை புறக்கணியுங்கள், குழந்தைகள் பட்டாசு வெடிக்கட்டும் - சத்குரு

Sadhguru jaggi vasudev

Sadhguru jaggi vasudev

பட்டாசுகள் வெடிக்கும் மகிழ்ச்சியை குழந்தைகள் அனுபவிக்கட்டும் திடீரென சுற்றுச்சூழல் மீது அக்கறை இருப்பதாக கூறி குழந்தைகளை பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை செய்யாதீர்கள் என சத்குரு தெரிவித்தார்.

  • Share this:
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக மூன்று நாட்களுக்கு வாகனங்களில் செல்வதை தியாகம் செய்துவிட்டு அதற்கு பதிலாக அலுவலகங்களுக்கு நடந்து செல்லுங்கள் என சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியிருக்கிறார்.

பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியை குழந்தைகள் அனுபவிப்பதை தடுக்க காற்று மாசுபாடு குறித்த கவலை ஒரு காரணமல்ல. அவர்களுக்காக உங்கள் தியாகமாக, 3 நாட்கள் உங்கள் அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள். பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியை குழந்தைகள் அனுபவிக்கட்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பட்டாசுகளால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுகள் வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசுகள் விதித்து வருகின்றன. இதன் காரணமாக பட்டாசுகள் வெடிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பட்டாசுகள் வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதனை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

Also Read:  பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு அமேசான் அனுப்பிய நிஜ பாஸ்போர்ட்.. இதெப்படி சாத்தியம்?

பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படும் விவகாரம் விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், இது குறித்து பேசியிருக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ் குழந்தைகளுக்காக வாகனங்களில் செல்வதை மூன்று நாட்களுக்கு தியாகம் செய்யுங்களேன் என கருத்து தெரிவித்திருக்கிறார்.

பட்டாசுகளை தடை செய்யாதீர்கள்:

பட்டாசுகள் வெடிக்கும் மகிழ்ச்சியை குழந்தைகள் அனுபவிப்பதை தடுக்க காற்று மாசுபாடு குறித்த கவலை ஒரு காரணம் கிடையாது. குழந்தைகளுக்காக ஒரு மூன்று நாட்களுக்கு பெரியவர்கள் அலுவலகங்களுக்கு வாகனம் செல்வதை தியாகம் செய்துவிட்டு நடந்து செல்லுங்கள். பட்டாசுகள் வெடிக்கும் மகிழ்ச்சியை குழந்தைகள் அனுபவிக்கட்டும் திடீரென சுற்றுச்சூழல் மீது அக்கறை இருப்பதாக கூறி குழந்தைகளை பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை செய்யாதீர்கள் என சத்குரு தெரிவித்தார்.



விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பட்டாசுகளைக் காட்டிலும் மனிதர்களால் தான் தீமை என்பதை உணர்த்தும் வகையிலான பதிவு ஒன்றையும் சத்குரு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.



அவர் கூறியிருப்பதாவது, “ஒவ்வொரு நாளும் இந்த பூமியில் 200 மில்லியன் விலங்குகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. நீங்கள் விலங்குகளை, சுற்றுச்சூழலை நேசிப்பவர்கள் என்றால் தினசரி இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், தற்போது சாப்பிடும் இறைச்சியில் பாதியை குறைத்தால் கூட 100 மில்லியன் உயிர்கள் காக்கப்படும்.

Also Read: ச்சீ..ச்சீ.. 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியதாக பெருமை பேசி வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்…

நீங்கள் விரும்பி உண்ணும் கபாப் சில மணி நேரங்களுக்கு முன் ஒரு விலங்கு என்பதை இறைச்சிக்கூடங்களுக்கு சென்று பார்வையிட்டு நீங்கள் உணர வேண்டும். உங்களுக்கு பிடித்த சிக்கன் ஒரு பறவை, பீஃப் ஒரு அன்பான விலங்கு என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்” இவ்வாறு சத்குரு தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: