ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

11,265 அரசுப்பள்ளிகளில் தலா 30க்கும் குறைவான மாணவர்களே கல்வி பயிலும் அவலம்

11,265 அரசுப்பள்ளிகளில் தலா 30க்கும் குறைவான மாணவர்களே கல்வி பயிலும் அவலம்

மாதிரி படம்

மாதிரி படம்

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான பள்ளி பாராமரிப்பு மானியத் தொகையை ஒதுக்கீடு செய்து அனுப்பியுள்ளது. மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் 11,265 அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 30 விழுக்காடு பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும் குறைவாகப் படித்து வருகின்றனர்.

  கொரோனா காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தனர். இந்நிலையில், 30 விழுக்காடு அரசுப்பள்ளிகளில் தலா 30க்கும் குறைவான மாணவர்களே  படிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமனத்தின்போது தொடக்கல்வித்துறையில் ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்களும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளி பராமரிப்பு மானியத் தொகையை ஒதுக்கீடு செய்து அனுப்பியுள்ளது. மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

  Also Read: குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் இனி ஏலம் தான்: புதிய ரூல்ஸை கொண்டு வர போக்குவரத்து காவல்துறை திட்டம்

  இந்த நிலையில் 1முதல்  8ஆம் வகுப்பு வரையில் 11,251 அரசு பள்ளிகளிலும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் 14 பள்ளிகள் என 11,265 அரசு தொடக்க , நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 30க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதியாக தலா ரூ.10 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  அதேபோல், 100 மாணவர்கள் மட்டுமே படிக்கும் 13 ஆயிரத்து 594 பள்ளிகளுக்கு ரூ.25 ஆயிரமும், 250 மாணவர்கள் படித்து வரும் 8,364 பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரமும் பராமரிப்பு நிதியாக வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Department of School Education, Government school, Tamilnadu