• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு 1000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு 1000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு 1000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு 1000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் பல மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்தவகையில், இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 1,19,769 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்மூலம் மொத்த பாதிப்பு 27,03,613 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,153 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 26,56,168 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 36,136-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து தற்போது 11,309 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று மட்டும் கோயம்புத்தூரில் 117 பேருக்கும், சென்னையில் 111 பேருக்கும், ஈரோட்டில் 73 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: