• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டம்... அச்சத்தில் மக்கள்...!

கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டம்... அச்சத்தில் மக்கள்...!

சிறுத்தை

சிறுத்தை

போதிய‌ பாதுகாப்பு ஏற்பாடுக‌ளை துரிதமாக செய்ய‌ வேண்டும் என்றும் பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில் மேல்பள்ளம் கிராம பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அந்த பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி பிரதான சாலையில் உள்ள மேல்பள்ளம் கிராம வனப்பகுதிகளிலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் தோட்டப் பகுதிகளிலும் காட்டெருமை, காட்டுப்பன்றி, மற்றும் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால்  விவசாயிகளின் விளைநிலங்களும் விவசாய பயிர்களும் சேதமாகி வருவது வழக்கமாகிவிட்டது.

ஆனாலும் வனத்துறையினரின் துணையோடு கிராம மக்கள் பட்டாசு வெடித்து காட்டு விலங்குகளை விரட்டி விளைநிலங்களை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடி வருவதாக அந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.

சிறுத்தையின் நடமாட்டம்


காட்டெருமைகள் அடிக்கடி முகாமிட்டு வரும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தினை பார்த்த கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் க‌ட‌ந்த‌ 2 நாட்க‌ளாக‌ அதே இட‌த்தில் சிறுத்தை ந‌ட‌மாட்ட‌ம் உள்ள‌தாக‌வும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ப‌க‌ல் நேர‌த்தில் சிறுத்தை ந‌ட‌மாட்ட‌ம் அதிகமாக உள்ள‌தால் கிராம‌ ம‌க்க‌ள் அச்ச‌த்தில் உறைந்துள்ளனர். மேலும் கொடைக்கானல் பழனி பிரதான சாலை என்பதால் இந்த சாலையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும், இப்பகுதி பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வ‌ன‌த்துறையின‌ர் சிறுத்தை ந‌ட‌மாட்ட‌த்தை கண்காணிக்க வேண்டும்.

அத்துடன் போதிய‌ பாதுகாப்பு ஏற்பாடுக‌ளை துரிதமாக செய்ய‌ வேண்டும் என்றும் பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

மேலும் படிக்க... திருச்சியில் குடும்பப் பிரச்னையில் 21 வயது இளைஞர் படுகொலை: பாதுகாப்பு படை வீரர் கல்லூரி மாணவர்கள் மீது புகார்.





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: