குடியாத்தத்தில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை தாக்கிய சிறுத்தை.. வீட்டின் உள்ளேயே சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்..

Youtube Video

குடியாத்தம் அருகே வீட்டுக்குள் சிறுத்தை புகுந்து தாக்கியதில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வீட்டுக்குள் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

 • Share this:
  குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல், கலர்பாளையம் பகுதியில் வேலாயுதம் என்பவரது வீட்டுக்குள் நேற்று நள்ளிரவில் உறுமும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த சிறுத்தையைக் கண்டு கூச்சலிட, தூங்கிக்கொண்டிருந்த மனைவி பிரேமா மகன் மனோகரன், மகள் மஹாலட்சுமி ஆகியோரும் வெளியே வந்துள்ளனர். அப்பொழுது மூவரையும் சிறுத்தை தாக்கி விட்டு வீட்டிற்குள் புகுந்தது.

  இதனை சுதாகரித்துக்கொண்ட மூவரும் சிறுத்தையை வீட்டிற்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டிற்குள் சிக்கியிருக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். சிறுத்தையை இரவில் பிடிக்க முடியாது என்ற காரணத்தால், இரவு முதல் கண்காணித்து வந்தனர்.

  மேலும் படிக்க... ஓசூர்: பெற்றோரின் சண்டைக்கு குறுக்கே வந்த கர்ப்பிணி சுட்டுக்கொலை

  தற்போது சிறுத்தையைப் பிடிப்பதற்கு உதவியாக வனத்துறையிடம் உதவி கேட்டுள்ளனர். குறிப்பாக வீட்டிற்குள் பதுங்கியிருக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தித்தான் பிடிக்க வேண்டும் என்ற முறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதால் மயக்க ஊசி நிபுணர்களின் உதவியையும் நாடியுள்ளனர்.  இந்நிலையில் காயம் அடைந்த 3 பேரும் குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: