ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அக்.19-ம் தேதிவரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

அக்.19-ம் தேதிவரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

19-ம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

  தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான 2வது கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டப்பேரவையின் முதல் நாள் நிகழ்வில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக பங்கேற்கவில்லை.

  சட்டப்பேரவையின் இந்தக்கூட்டத்தொடரில் மறைந்த எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து   இன்றைய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

  இதையும் படிங்க : TNAssembly: எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆப்சென்ட்.. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பவுன்சர்ஸுடன் வருகை!

  இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலோசிக்க சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.

  இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் கட்சியின் கொறடா எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார்.

  இந்தக்கூட்டத்தில் நாளை மறுநாள் (19ஆம் தேதி ) வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: ADMK, DMK, Tamilnadu