அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்போது திட்டத்தில உள்ளடங்கிய நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 20 ஆம் பிரிவு வழிவகை செய்துள்ளது.
மேலும், வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிலம் மற்றும் கட்டிடத்தை எடுப்பதற்கு உரிமையாளர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.
இதற்கிடையே நில உரிமையாளர் வேறு நபருக்கு நிலத்தின் உரிமையை மாற்றம் செய்துவிட்டால், திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையற்ற குழப்பமும், காலதாமதமும் ஏற்படுவதாக சட்டதிருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர்க்க நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களிடம் கலந்து ஆலோசிப்பதை விட்டொழிக்க சட்டதிருத்தம் கொண்டுவந்து பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும், திட்டம் தொடர்பான மறுப்புகள், ஆலோசனைகளை எழுத்து வடிவில் தேவைப்படும் நபர் அரசுக்கு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Also read... மறுசுழற்சி மையம் அமைக்கப்படும்வரை கூடங்குளத்திலேயே கழிவுகள் இருக்கும் - மத்திய அரசு
எனவே திட்டம் தொடர்பான கருத்து தெரிவிக்க இச்சட்டதிருத்தின் கீழ் வாய்ப்பு வழங்கப்படுவதாவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த சட்டதிருத்த மசோதா பேரவையில் நேற்று தாக்கல் செய்யும் போதே திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
அப்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, நிலம் உரிமையாளர்களுக்கு எவ்வகையிலும் பலன் அளிக்காது என்றும், அவர்களை கலந்து ஆலோசிக்காமல் நிலத்தை எடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதத்தை போக்க இச்சட்டதிருத்தம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டம் நிறைவேறியது.