Home /News /tamil-nadu /

திருநங்கைகள் அரசுப் பணிகளில் சேர ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்கள் நீக்கப்படும் - அமைச்சர் உறுதி

திருநங்கைகள் அரசுப் பணிகளில் சேர ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்கள் நீக்கப்படும் - அமைச்சர் உறுதி

Transgenders

Transgenders

Transgenders: திருநங்கைகள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகளை கேட்டுள்ளார்கள் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்

    காவலர் , செவிலியர்கள் உள்ளிட்ட அரசுப் பணிகளில் சேர திருநங்கைகளுக்கு (Transgenders) ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்கள் நீக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

    சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் முதல் கூட்டம் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திருநங்கைகள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகளை கேட்டுள்ளார்கள் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

    இந்த ஆட்சியில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு கொரோனா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண கட்டணப் பேருந்தில் இதுவரை 3.15 லட்சம் திருநங்கைகள் இலவச பயணம் தெரிவித்தார்.
    661 தகுதியான திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றார்.

    இதையும் படிங்க:  ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல் - போக்குவரத்து முடக்கம்

    இதுவரை 9 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் திருநங்கைகளுக்கு பிரத்யேகமாக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்க தயாராக உள்ளதாகவும் திருநங்கைகளுக்கான காவலர் ,செவிலியர்கள் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்கள் நீக்கப்படும் என்றும் கூறினார்

    கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை தொடர்பாக ஏராளமான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கிராம அளவில் தனித்தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:   பட்டுக்கோட்டையில் 6 மாத கைக் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? குடும்பத்தினரிடம் விசாரணை

    குழந்தைகள் பாலியல் ரீதியான புகார்கள் குறித்த கேள்விக்கு 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் 27,846 ஆயிரம் புகார்கள் வந்துள்ளது. 2012முதல் 21 ஆண்டு வரை 17 ஆயிரம் போக்சோ வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 7 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் , 1019 வழக்குகள் தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளது, 4 ஆயிரம் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றார்.
    Published by:Arun
    First published:

    Tags: Transgender

    அடுத்த செய்தி