பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
  • News18
  • Last Updated: October 28, 2019, 8:37 AM IST
  • Share this:
பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து மூட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்குப் பணிகள் 4-ம் நாளாக நடைபெற்று வரும் நிலையில் மீட்புப் பணியை நேரில் சென்று பார்வையிட்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று இரவு 11.30 மணிக்கு நடுகாட்டுப்பட்டிக்கு வந்த துணை முதல்வர் மீட்புப் பணிகளை பார்வையிட்டு இயந்திரங்களின் செயல்பாடு பற்றியும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்து குழந்தையை எப்படியும் மீட்டு விடலாம் என அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மிகவும் கடுமையான பாறைகள் உள்ளதால் துளை போடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதல் இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 2 அடிதான் துளை போட முடிந்தது. இரண்டாவது இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 10 அடிக்கு துளை போட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை 35 அடிக்கு துளை போடப்பட்டுள்ளதால் இன்னும் 45 அடிக்கு துளை போட வேண்டியுள்ளது. குழந்தையை உயிருடன் மீட்க தீவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்


மேலும் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து மூட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

Also watch

First published: October 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...