ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட 11 இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம்!

மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட 11 இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம்!

திரைப்பட வர்த்தகம் ஸ்டுடியோக்களின் கைகளிலிருந்து ஹீரோக்களின் கைகளுக்கு மாறி தற்போது படைப்பாளிகளின் கைகளில் தஞ்சமடைந்துள்ளது.

திரைப்பட வர்த்தகம் ஸ்டுடியோக்களின் கைகளிலிருந்து ஹீரோக்களின் கைகளுக்கு மாறி தற்போது படைப்பாளிகளின் கைகளில் தஞ்சமடைந்துள்ளது.

திரைப்பட வர்த்தகம் ஸ்டுடியோக்களின் கைகளிலிருந்து ஹீரோக்களின் கைகளுக்கு மாறி தற்போது படைப்பாளிகளின் கைகளில் தஞ்சமடைந்துள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

தமிழின் முன்னணி இயக்குனர்கள் 11 பேர் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் படங்களை தயாரித்து, இயக்கி வெளியிட உள்ளனர்.

முதலில் அந்த 11 பேர் யார் என பார்க்கலாம். மணிரத்னம், ஷங்கர், .ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ மேனன், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், சசி, லிங்குசாமி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ். இவர்கள் பத்து பேரும் இணைந்து ரெயின் ஆன் ஃபிலிம்ஸ் பிரைவெட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதன் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தொடர்ந்து மற்ற இயக்குனர்களும் படங்கள் இயக்க உள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திரைப்பட வர்த்தகம் ஸ்டுடியோக்களின் கைகளிலிருந்து ஹீரோக்களின் கைகளுக்கு மாறி தற்போது படைப்பாளிகளின் கைகளில் தஞ்சமடைந்துள்ளது. பெயர் தெரிந்த ஒரு இயக்குனரின் படமென்றால் ஓடிடி தளங்கள் கண்ணை மூடிக் கொண்டு வாங்குகின்றன. நெற்றிக்கண் என்ற சுமார் படம் திரையரங்கில் வெளியாகியிருந்தால் வாஷ் அவுட்டாகியிருக்கும். ஓடிடியில் வெளியானதால் 15 கோடி ரூபாய் தயாரித்தவர்களுக்கு கிடைத்தது. இன்னொரு உதாரணம் நெட்பிளிக்ஸில் வெளியான மணிரத்னத்தின் நவரசா. திரையரங்கில் அட்டர் பிளாப்புக்கு சாத்தியமானவையும் ஓடிடியில் லாபம் தருகின்றன. ஒரே முதலீடு, பிரபல இயக்குனர் என்ற பெயர். அதனை அறுவடை செய்ய இந்த முன்னணி இயக்குனர்கள் இணைந்திருக்கிறார்கள்

Also read... அஜித்தின் வலிமையால் முடங்கிய சிரஞ்சீவி படம்...!

விசாரணை படத்துக்காக வெற்றிமாறனுக்கு பாராட்டு தெரிவிக்க முன்னணி இயக்குனர்களை (இயக்குனர்கள் மட்டும்) ஒருங்கிணைத்தார் மிஷ்கின். அதையடுத்து ஷங்கருக்காக இப்படியொரு ஒன்றுகூடல் நடந்தது. இந்த இரண்டிலும் கலந்து கொண்டவர்கள்தான் இந்த பதினொன்றில் பத்து பேர். கலந்து கொள்ள ஒரேயொருவர் லோகேஷ் கனகராஜ். அந்தவகையில் இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்துக்கு அடிகோலியவர் மிஷ்கின் என்றும் கூறலாம்.  நவரசா மாதிரி எடுக்காமல் உருப்படியாக ஏதாவது செய்தால் நல்லது.

First published: