Home /News /tamil-nadu /

இன்று முத்துராமலிங்க தேவர் 111-வது பிறந்தநாள்: முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு

இன்று முத்துராமலிங்க தேவர் 111-வது பிறந்தநாள்: முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு

தேவர் ஜெயந்தி

தேவர் ஜெயந்தி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.

  • 1 minute read
  • Last Updated :
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதையொட்டி, பசும்பொன் கிராமத்தில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி, கடந்த 2 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்று நடைபெறும் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜையையொட்டி தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதையொட்டி, பசும்பொன், கமுதி, அபிராமம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கோட்டைமேடு மற்றும் கமுதியில் உள்ள முக்கிய இடங்களில் போலீசார் ஆள்ளில்லா உளவு விமானம் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Yuvaraj V
First published:

Tags: Muthuramalinga Thevar, Thevar Jayanthi

அடுத்த செய்தி