திருவாரூரில் ஸ்டாலின்; சேலத்தில் எடப்பாடி பழனிசாமி: தலைவர்களின் இறுதிக்கட்ட பிரசார விவரம்

சேலத்தில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நாகப்பட்டின மாவட்டம் திருவாரூரில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

news18
Updated: April 16, 2019, 5:59 PM IST
திருவாரூரில் ஸ்டாலின்; சேலத்தில் எடப்பாடி பழனிசாமி: தலைவர்களின் இறுதிக்கட்ட பிரசார விவரம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
news18
Updated: April 16, 2019, 5:59 PM IST
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் திருவாரூரிலும், எடப்பாடி பழனிசாமி, சேலத்திலும், டி.டி.வி.தினகரன் சென்னையிலும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஆறு மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கனிமொழி இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கோவில்பட்டியில் இறுதிக்கட்ட பரப்புரைக்கான பொதுக்கூட்டத்தில் வைகோ, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் பேசிய கனிமொழி, ‘அனைவரும் கோயிலுக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தது தி.மு.கதான். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் வடிவம் தான் பா.ஜ.க. நாம் போராடிப் பெற்ற உரிமைகளை வெட்டும் கோடரியாக பா.ஜ.க உள்ளது. அதனைத் தாங்கிப் பிடிக்கும் கையாக அ.தி.மு.க உள்ளது’ என்று பேசினார்.

தென் சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் தீவிரமாக இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது பேசிய சீமான், ‘தமிழர் நிலத்தை தமிழர்களே ஆள வேண்டும். மற்ற மாநிலத்தவர்கள் நம்மை ஆளும்போது, அவர்கள் நடிக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு நம்முடைய உணர்வு புரியாது. இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்வது நமக்கு அவமானம்’ என்று பேசினார்.

சேலத்தில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூரில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மு.க.ஸ்டாலின், தி.மு.க தொண்டர்கள் திரளாக திரண்டு வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், ’ஆசியாவின் மிகப் பெரிய தேர் திருவாரூரில் தான் உள்ளது. 1948-ல் இருந்து ஓடாமல் இருந்த தேரை, 1970-ல் கருணாநிதிதான் ஓடச் செய்தார். என்னுடைய பிரசாரத் தேரும் திருவாரூரில் தான் தொடங்கியது. தற்போது, பிரசாரத் தேரை திருவாரூரிலேயே முடிக்கிறேன். ஒரு தேர் புறப்பட்டால், அதே இடத்தில் வந்து முடிக்க வேண்டும். அதுபோல, தான் என்னுடைய பரப்புரை முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் 40-க்கும் 40 தி.மு.க வெல்லும். அதேபோல, 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க வெல்லும்’ என்று தெரிவித்தார்.

அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையிலுள்ள தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுப்பட்டார். தி.மு.க கூட்டணியையும், அ.தி.மு.க கூட்டணியையும் மக்கள் புறக்கணிப்பாரகள்’ என்று தெரிவித்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் போட்டியிடும் அவரது மகன் ரவிந்திரநாத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

Also see:

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...