• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மரணம்: ஸ்டாலின், வைரமுத்து இரங்கல்!

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மரணம்: ஸ்டாலின், வைரமுத்து இரங்கல்!

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்

எங்கள் தமிழ்ப் புதையலே போய்விட்டாயா?’ என்று கருத்துலகம் கண்ணீர் சிந்துகிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் தமிழன்பர்களுக்கும் அவரால் கற்பிக்கப்பட்ட மாணவர் பேருலகத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

    தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக்குறைவால் காலமானார். 91-வயதான இவர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், தமிழ் இலக்கிய அறிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சிலம்பொலி செல்லப்பன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிலம்பொலி செல்லப்பனுக்கும் தமிழுக்கும் உள்ள ஆழ்ந்த உறவு என்றென்றும் நிலைத்து நிற்கும் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர் எழுதிய எளிமையான சிலப்பதிகார உரைகள் இளைய தலைமுறை மட்டுமின்றி, தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய பரிசாக இருக்கும் என்பதில் ஐயமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து சிலம்பொலி செல்லப்பனுக்காக தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், சிலம்பொலி செல்லப்பனின் மறைவுச் செய்தியறிந்து தமிழின் அறிவுலகம் வருந்துகிறது.

    ஒரு நடமாடும் நூலகத்தைச் சாவு காவு  கொண்டுவிட்டது. இதிகாசங்களையும் புராணங்களையும் மட்டுமே உபன்யாசம் செய்துவந்த தமிழ் மேடைகளில் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் சீவக சிந்தாமணியையும் சீறாப் புராணத்தையும் தேம்பாவணியையும் சொற்பொழிவுப் பொருளாக்கியவர் சிலம்பொலி செல்லப்பன்.

    ஆயிரமாயிரம் அணிந்துரைகள் எழுதி வாழும் படைப்பாளிகளை வளர்த்துவிட்டவர்.நாங்களெல்லாம் அய்யம் கேட்பதற்கு மிச்சமிருந்த அகராதி இன்று தொலைந்துவிட்டது.

    இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் என்றால் ம.பொ.சி நினைவிற்கு வருவார்.ம.பொ.சிக்குப் பிறகு சிலம்பொலிதான் நினைவில் நிற்பார்.சிலம்பொலியின் மறைவினால் பாவேந்தர் பாரதிதாசன் இன்னுமொருமுறை இறந்திருக்கிறார்.

    ‘எங்கள் தமிழ்ப் புதையலே போய்விட்டாயா?’ என்று கருத்துலகம் கண்ணீர் சிந்துகிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் தமிழன்பர்களுக்கும் அவரால் கற்பிக்கப்பட்ட மாணவர் பேருலகத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

    Also see...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்

    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: