Home » News » Tamil-nadu » LEADER WILL DECIDE ON THE CONSTITUENCY IN WHICH IT WILL CONTEST UDAYANIDHI STALIN IN ERODE VAI

’நான் போட்டியிடும் தொகுதி குறித்து தலைமைதான் முடிவு செய்யும்..’ - உதயநிதி ஸ்டாலின்

வரும் சட்டமன்ற தேர்தலில்  தான் போட்டியிடும் தொகுதி குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

’நான் போட்டியிடும் தொகுதி குறித்து தலைமைதான் முடிவு செய்யும்..’  - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
  • News18 Tamil
  • Last Updated: November 12, 2020, 12:22 PM IST
  • Share this:
ஈரோடு மாவட்டம் பவானியில் திமுக மாநில  மாணவரணி துணை செயலாளர் ரங்கசாமி  என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். அவரது படத்திறப்பு விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உயிரிழந்த ரங்கசாமி படத்தைத் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் விஜயின் தந்தை ஆரம்பித்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், அதனை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

அதன் பின்னர் வரும் தேர்தலில் நீங்கள் போட்டியிடும் தொகுதி என்ன என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி குறித்து  தலைமைதான் முடிவு செய்யும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் படிக்க...சென்னை : சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..


இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி, பாரி, துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
First published: November 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading