Home /News /tamil-nadu /

இரட்டை இலை வழக்கில் லஞ்சம்.. முக்கிய சாட்சி திடீர் தற்கொலை

இரட்டை இலை வழக்கில் லஞ்சம்.. முக்கிய சாட்சி திடீர் தற்கொலை

Youtube Video

இரட்டை இலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.

    இரட்டை இலை வழக்கில் மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

    தமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு உயிரிழந்தார். அவருடைய மறைவைத் தொடர்ந்து சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி உருவானது. அதனையடுத்து, தேர்தல் ஆணையம் தலையிட்டு அ.தி.மு.கவுக்கு சொந்தமான இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

    சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றிருந்ததால் டி.டி.வி.தினகரன் தலைமையில் அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி செயல்பட்டுவந்தது. அப்போது, கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத்தர 50 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தினகரன் அவருக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அதனையடுத்து, டி.டி.வி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தெரியாது என்று டி.டி.வி.தினகரன் கூறினார். விசாரணைக்கு பிறகு டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டார்.

    பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் சுகேஷ் சந்திரசேகரை, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த மோசடி வழக்கிலும் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷை, ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அதேபோல, டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

    அதேபோல, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத்தையும் நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்தநிலையில், கோபிநாத் சென்னை திருவேற்காட்டிலுள்ள அவரது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK

    அடுத்த செய்தி