முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்.. வழக்கின் முக்கிய நபர் வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்.. வழக்கின் முக்கிய நபர் வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை

இரட்டை இலை வழக்கு

இரட்டை இலை வழக்கு

Two leaves symbol case : இரட்டை இலை சின்ன வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

  • Last Updated :

தமிழகத்தின் முதலமைச்சராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு உயிரிழந்தார். அவருடைய மறைவைத் தொடர்ந்து சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி உருவானது. அதனையடுத்து, தேர்தல் ஆணையம் தலையிட்டு அதிமுகவுக்கு சொந்தமான இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றிருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணி செயல்பட்டுவந்தது.  கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத்தர 50 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தினகரன் அவருக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரை, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கிலும் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அத்துடன், இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை:

சென்னையை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் வயது 31. இவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கடந்த 5ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இரட்டை இலை விவகாரத்தில் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டபோது, அவரது வழக்கறிஞரான ராமாபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மோகன்ராஜுவிடம் ஜுனியர் வழக்கறிஞராக இருந்தவர்தான் இந்த கோபிநாத். இவர் இரட்டை இலை சின்னத்திற்கு கொடுத்ததாக எழுந்த புகாரில் கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கறிஞர் கோபிநாத் வீட்டிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த விசாரணையின்போது, டிடிவி தினகரன் தரப்பில் இருந்து லஞ்சம் கொடுத்தது உண்மைதான் என வழக்கறிஞர் கோபிநாத் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது.

Must Read : அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதலா? - ஜெயக்குமார் விளக்கம்

அத்துடன், மோகன்ராஜ் கூறிய தகவல்களை சுகேஷ் சந்திரசேகருக்கு கோபிநாத் தனது செல்போன் மூலம் தெரிவித்து இருக்கிறார் என சொல்லப்படுகிறது. எனவே, இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவராக கோபிநாத்தை அமலாக்கத் துறையினர் சேர்த்துள்ளனர். 8ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு டெல்லியில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியதோடு, இது குறித்து 5ஆம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டும் அறிவுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் வழக்கறிஞர் கோபிநாத் திடீரென்று தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: ADMK, Suicide, Two Leaves