ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
சமூகநீதி அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், “உத்ரகாண்ட் அரசுக்கும், முகேஷ் குமார் என்பவருக்கும் இடையேயான வழக்கில், ’வேலைவாய்ப்பு என்பது அடிப்படை உரிமையில்லை. மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ அதை நிறைவேற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது, நீதிமன்றம் அப்படி ஆணையிட முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது, வேலைவாய்ப்பை பறிக்கக்கூடியது. ஆகவே, உடனடியாக மத்திய அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கைத் தொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கென்று சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்றும் அதை அரசமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
மேலும் அவரின் உரையில், ”உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தேசிய சட்ட ஆணையம் தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ள வெறுப்புக் குற்றங்கள் தொடர்பான மசோதாவை உடனடியாக சட்டமாக்க வேண்டும்.”
”அரசாங்கத்தின் அலட்சியத்தால் ஆணவக்கொலைகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. உச்சநீதிமன்றம் இதற்கென சட்டம் இயற்றும்படி உத்திரவிட்டிருக்கிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. எனவே, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்” இவ்வாறு கூறினார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.