முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் எப்படி நிராகரித்தார் என்பது தெரியவில்லை - சட்ட அமைச்சர் ரகுபதி கருத்து

ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் எப்படி நிராகரித்தார் என்பது தெரியவில்லை - சட்ட அமைச்சர் ரகுபதி கருத்து

ஆளுநர் ஆர்.என். ரவி - அமைச்சர் ரகுபதி

ஆளுநர் ஆர்.என். ரவி - அமைச்சர் ரகுபதி

இந்த சட்டம் என்பது இது இரண்டாம் முறையாக நிராகரிக்கவில்லை இது முதல் முறை தான் இதற்கு முன்பாக அந்த சட்டத்தின் தொடர்பான சில கேள்விகளை கேட்டு அனுப்பினர் என அமைச்சர் விளக்கம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் ரம்மி குறித்த சட்ட மசோதாவிற்கு முதலமைச்சர் பதிலளிப்பார் எனவும், இந்த மசோதாவை ஆளுநர் எப்படி நிராகரித்தார் என்பது தெரியவில்லை எனவும் தமிழ்நாடு சட்டதுறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு அளித்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவரச சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, ஆன்லைன் சூதாட்ட மசோதாவை பேரவையில் அமைச்சர் ரகுபதி அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்தார். அது பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனிடையே தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் கடந்த நவம்பர் மாதம் காலவதியானது. தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறிய நிலையில், கடந்த 1ஆம் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

இந்தநிலையில், 4 மாதம் 11 நாட்கள் கழித்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு சட்டதுறை அமைச்சர் ரகுபதி, ‘புதிய சட்டம் கொண்டு வருவதற்கு சட்டமன்றத்திற்கு உரிமை இருக்கிறது என நீதிமன்றமே கூறி இருக்கிறது. எனவே இணையதள சூதாட்டத்திற்கு சட்டமன்றம் புதிய சட்டம் ஏற்றலாம். இது தொடர்பாக ஆளுநர் எப்படி நிராகரித்தார் என்பது தெரியவில்லை. எனவே ஆளுநர் நிராகரித்து இருப்பதற்கு என்ன கூறியிருக்கிறார் என்பதனை அவர் அனுப்பி உள்ள கோப்புகளை பார்த்துவிட்டு நிச்சயமாக அதற்கு பதில் தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவார்.

இந்த சட்டம் என்பது இது இரண்டாம் முறையாக நிராகரிக்கவில்லை இது முதல் முறை தான் இதற்கு முன்பாக அந்த சட்டத்தின் தொடர்பான சில கேள்விகளை கேட்டு அனுப்பினர். அதன் பின்னர் நாங்கள் சட்டமன்றத்தில் இயற்றிய புதிய சட்டத்திற்கு அவர்கள் ஒப்புதல் அளித்தாக வேண்டும் மறுப்பதற்கு வாய்ப்பில்லை. திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, Online rummy, RN Ravi