Home /News /tamil-nadu /

மூவர் விடுதலை சட்டத்திற்கு புறம்பானது அல்ல - சி.வி.சண்முகம்

மூவர் விடுதலை சட்டத்திற்கு புறம்பானது அல்ல - சி.வி.சண்முகம்

அமைச்சர் சி.வி.சண்முகம்

அமைச்சர் சி.வி.சண்முகம்

எழுவர் விடுதலையில் ஆளுநர் குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூவர் விடுதலை செய்யப்பட்டது  சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 3 குற்றவாளிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், “தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளிகளான அதிமுகவினரை விடுதலை செய்துள்ள அரசு, 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யாதது ஏன்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மூவர் விடுதலை செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. இதில் எந்தவித சாதி, அரசியல், மதம் பார்க்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், எழுவர் விடுதலையில் ஆளுநர் குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. தமிழக அமைச்சரவை கூடி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு கடிதம்அனுப்பி வைத்துள்ளோம். ஆளுநர் தரப்பிலிருந்து எழுவர் விடுதலை குறித்து எந்த பதிலும் தமிழக அரசிற்கு இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலையில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்பிக்கையுடன் தமிழக அரசு எதிர்ப்பார்த்திருப்பதாகவும் கூறினார்

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் கோரி போராட்டம் நடத்த மக்களை எதிர்கட்சிகள் வேண்டுமென்றே தூண்டிவிடுகின்றனர். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை தமிழக அரசு முறையாக செய்து வருவதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dharmapuri bus burnt

அடுத்த செய்தி