ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பல்லக்கு விவகாரம்: சடங்கை விட சட்டமே முக்கியம் - சு.வெங்கடேசன்

பல்லக்கு விவகாரம்: சடங்கை விட சட்டமே முக்கியம் - சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

காலம் மாறும் போது எல்லாரும் மாறித்தான் ஆக வேண்டும். மனிதரை மனிதர் சுமக்கும் அடிமைத்தன முறையும் காலத்திற்கு ஏற்றார் போல் மாற வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சந்நியாசி தர்மங்களை எல்லாம் மடாதிபதிகள் நிஜமாகவே பின்பற்றுகிறார்களா என கேள்வியெழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மடத்தின் சடங்குகளை விட சட்டமே மேலானது என்றும் அதற்கு மடாதிபதிகள் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

நத்தம் புறம்போக்கு நிலம் மற்றும் கோவில் நிலங்களில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்துக்கு உட்பட்டு பட்டா வழங்க சாத்தியமுள்ள நபர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பல்லக்கு விவகாரத்தில் மதுரை ஆதினத்தின் சர்ச்சை கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன், “ "மடத்திற்கென பல சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கலாம்.

ஆனால், மடத்தின் சம்பிரதாயங்களை விட மேலானது அரசியல் சாசன சட்டம். அதற்கு தங்களை மடாதிபதிகள் உட்படுத்திக் கொள்ள வேண்டும். சன்யாசி தர்மப்படி, நடந்து தான் செல்ல வேண்டும், பிச்சை எடுத்து ஒரு வேளை தான் சாப்பிட வேண்டும், அதையும் சுவை இல்லாமல் தான் உண்ண வேண்டும். அந்த சன்யாசி தர்மங்களை எல்லாம் நிஜமாகவே மடாதிபதிகள் பின்பற்றுகிறார்களா?

இதையும் படிங்க: தருமபுரம் ஆதினத்துக்கு பல்லக்கு சுமப்பது எங்கள் சமய உரிமை.. பல்லக்கு சுமப்பவர்கள் திட்டவட்டம்

காலம் மாறும் போது எல்லாரும் மாறித்தான் ஆக வேண்டும். மனிதரை மனிதர் சுமக்கும் அடிமைத்தன முறையும் காலத்திற்கு ஏற்றார் போல் மாற வேண்டும். அதை தான் அரசு சொல்கிறது. அதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லை. பழமைகளை மீறி ஜனநாயகம் வெல்லும்" என்றார்.

.

First published:

Tags: Dharmapuram Aadheenam, Su venkatesan