Home /News /tamil-nadu /

கல் குவாரிகளை தன் இஷ்டத்திற்கு கட்சி எம்.எல்.ஏ. மகனுக்கு கொடுக்க எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை - ஆர்.எஸ். பாரதி காட்டம்

கல் குவாரிகளை தன் இஷ்டத்திற்கு கட்சி எம்.எல்.ஏ. மகனுக்கு கொடுக்க எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை - ஆர்.எஸ். பாரதி காட்டம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

அ.தி.மு.க. அமைச்சர் - அதுவும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் திரு. சண்முகம் கொடுத்த குத்தகை விஷயத்திலும் எடுத்து வைக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    அரசின் சொத்தான கல் குவாரிகளை தன் இஷ்டத்திற்கு கட்சி எம்.எல்.ஏ. மகனுக்கு கொடுக்க எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை என்று ஆர்.எஸ். பாரதி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி MP விடுத்துள்ள அறிக்கையில், ”’மத்திய அரசு நீட் சட்டத்தைத் திருப்பி அனுப்பியும் - அது நிராகரிக்கப்படவில்லை’ என்று அரைவேக்காடு போல் பேசி அசிங்கப்பட்ட சட்ட அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் ’தன்னை ஒரு சட்டப்புலி’ என்று கற்பனை செய்துகொண்டிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

    ’வானூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ மகன் பிரபு கல் குவாரியை ஏலத்தில் எடுக்கக் கூடாது என எந்தச் சட்டமும் இல்லை. சட்டப்புலி மு.க.ஸ்டாலின் நுனிப்புல் மேயாமல் ஆவணங்களைக் கவனமாகப் படிக்க வேண்டும்’ என்று எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து - பேட்டி என்ற பெயரில் உளறிக் கொட்டியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

    மேலும் அந்த கூறுகையில், “டான்சி வழக்கில், ’அரசு நிலத்தை முதலமைச்சர் வாங்கியதில் என்ன தவறு’ என்று குதர்க்கமான வாதத்தை முன் வைத்தார்கள். அதையும் மீறித்தான் கீழமை நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாருக்குச் சிறைத் தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் கூட அந்த அம்மையார் அரசிடமிருந்து வாங்கிய ’டான்சி நிலத்தை’ திருப்பிக் கொடுத்துத்தான் தப்பித்தார். ஊரறிந்த - உலகமறிந்த தீர்ப்பைக் கூட அறியாமல் - ஒரு சட்ட அமைச்சர் கோட்டையில் நின்று கொண்டு பேட்டி என்ற பெயரில் பிதற்றியிருக்கிறார் - ஏன், உளறியிருக்கிறார் திரு. சி.வி. சண்முகம்.

    Also read: க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு: எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இரங்கல்

    ’பொது ஊழியரின் உறவினர் டெண்டர் எடுக்கக்கூடாது என்று ஏதும் விதி இல்லை’ என்று உயர்நீதிமன்றத்தில் திரு. சண்முகம் ’மனமுவந்து’ ஏற்றுக்கொண்டுள்ள எடப்பாடி திரு. பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் வாதிட்டார். ஆனால் அந்த வழக்கில்தான் 4000 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்தது. அதே சொத்தை வாதத்தைத்தான் இப்போது வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ திரு. சக்ரபாணி மகன் பிரபுவிற்கு - அ.தி.மு.க. அமைச்சர் - அதுவும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் திரு. சண்முகம் கொடுத்த குத்தகை விஷயத்திலும் எடுத்து வைக்கிறார்.

    அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் குவாரிகள் - அரசின் சொத்து. அதை தன் இஷ்டத்திற்கு அமைச்சர் தன் கட்சி எம்.எல்.ஏ. மகனுக்கு கொடுக்க எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தையும், இந்தியத் தண்டனைச் சட்டத்தையும், அமைச்சர்களுக்கு உள்ள நன்னடத்தை விதிகளையும் எப்போதாவது ஒருமுறையாவது புரட்டிப் பார்த்திருந்தால் திரு. சி.வி.சண்முகம் இப்படி அபத்தமான - அரை வேக்காடு - அநாகரிகமான வாதத்தை வைத்திருக்க மாட்டார். ஊழல்வாதிகள் ’ஊழல் தடுப்புச் சட்டங்களை’ எதிர்த்துத்தான் பேசுவார்கள். அதற்கு முதலமைச்சர் திரு. பழனிசாமியோ - அமைச்சர் சி.வி. சண்முகமோ விதிவிலக்கல்ல என்பதுதான் இந்தப் பேட்டி சொல்லும் செய்தி.



    மேலும், ”அமைச்சர் ஒருவர் தன் சொந்தக்கட்சி எம்.எல்.ஏ.வின் மகனுக்கு அரசு குவாரியை அடிமாட்டு விலைக்குக் கொடுப்பது முறையா? அது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றமாக வருமா வராதா என்று ஆத்ம பரிசோதனை செய்து பாருங்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Minister cv shanmugam, RS Barathi

    அடுத்த செய்தி