சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்

news18
Updated: March 13, 2018, 10:20 PM IST
சட்டக்  கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை சட்டக்கல்லூரி
news18
Updated: March 13, 2018, 10:20 PM IST
கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று மாலையுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

சென்னை பாரிமுனையில் இயங்கிவரும் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 1788-ம் ஆண்டு முதல் மாணவர்கள் சட்டம் பயின்று வருகிறார்கள். மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் என இரு பிரிவுகளில் சட்டப் பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்ந்த மாணவர்கள் இடையேயான மோதலை காரணம் காட்டி, உயர் நீதிமன்ற வளாகத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில், கல்லூரியை இடமாற்றம் செய்து திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரண்டு இடங்களில் கல்லூரியை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அந்த நேரத்திலேயே மாணவர்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கல்லூரி இடமாற்றம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தற்போது ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியை அடுத்து, இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு  தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 15 நாட்களாக  உள்ளிருப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் மாணவர்கள் சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ்குமாரை சந்தித்து கல்லூரி இடம்மாற்றம் செய்யக்கூடாது,18 ,19 ஆண்டுகளாக்கான சேர்க்கை இந்த கல்லூரியிலே நடைபெற வேண்டும், கல்லூரி மாற்றம் தொடர்பான கமிட்டியில் மாணவர்கள் இடம்பெறவேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த கோரிக்கயை ஏற்றுக்கொண்டதின் பேரில் மாணவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இந்த கோரிக்கையை அரசு மீறும் பட்சத்தில் தங்களது போராட்டம் தீவிரமடையும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்