திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாகி வருகிறது என எதிர்கட்சி தலைவர்
எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், அதனை தடுத்து நிறுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர், விருதுநகர் கூட்டு பாலியல் விவகாரம் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன், இது போல பல குற்றங்கள் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் நடந்து வருகிறது.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாகியுள்ளது, ரவுடிகள் எல்லாம் சென்னையில் சுதந்திரமாக வலம் வருவது என திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது நிலையில்
இதனை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
மருதமலை முருகன் கோயிலில் ரோப் கார் வசதி கோரிய எம்எல்ஏ.. அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்!
110 விதியின் 10 ஆண்டுகளில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அதனை நிறைவேற்றி உள்ளோம். அவற்றின் நன்மைகளை எல்லாம் முதல்வர் தெரிவிக்கவில்லை, துறை வாரியாக அமைச்சர்கள் 10 ஆண்டுகளில் நிறைய அறிவிப்புகள் வெளியிட்டு அதனை நிறைவேற்றி உள்ளோம் அவற்றை முதல்வர் தெரிவிக்கவில்லை.
முதல்வரின் இயலாமை காரணமாக சட்ட ஒழுங்கை முறையாக காப்பாற்ற முடியவில்லை. தாலிக்கு தங்கம் திட்டம் , திருமண உதவி திட்டம் , உள்ளிட்ட அதிமுக அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு மாறாக திட்டங்களை இந்த அரசு அறிவித்துள்ளது.
கிராமப்புற ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு ஆடுகள் கரவை மாடுகள் வழங்கும் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது. கிராம பொருளாதாரம் மேம்படவில்லை. அம்மா மினி கிளினிக் திட்டம் , அம்மா ஸ்கூட்டர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை இந்த அரசு கைவிட்டுள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. ரவுடிகள் சுதந்திரமாக உலாவி வருகின்றனர். தினந்தோறும் கொள்ளை, கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது இதனை கண்டித்து இன்று வெளிநடப்பு செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.