கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க சிரிப்பு யோகா... பலன் தரும் சித்த மருத்துவம்

யோகா பயிற்சி

கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க திருப்பத்தூரில் உள்ள கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

 • Share this:
  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதபுரம் பகுதியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது கடந்த 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவன், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், தேவராஜ் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் துவக்கி வைக்கப்பட்டது. இங்கு 100 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட சிகிச்சை மையத்தில் நோயாளிகள் இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில் சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்

  தற்போது இம்மையத்தில் 55 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர்களுக்கு தரமான சித்த மருந்துகளும் சத்தான உணவு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகள் மன இறுக்கத்தில் இருந்து விடுபட இவர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில் நோயாளிகள் பங்கேற்று வாய்விட்டு சிரித்து பகிர்வதன் மூலம் தங்களின் கவலைகளை மறந்து மகிழ்கின்றனர்.

  தினந்தோறும் மன இறுக்கத்தைப் போக்க மாலை நேரத்தில் கலைநிகழ்ச்சிகள் களைகட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக சித்த மருத்துவர் விக்ரம் தனது குழுவினருடன் இன்னிசை கச்சேரி நிகழ்த்தி கொரோனா நோயாளிகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.

  மேற்படி சிகிச்சை மையத்தில் சிரிப்பு யோகா, சிகிச்சை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நகைக்கடை உரிமையாளர் தன்னார்வலர் கோபி என்பவர் யோகா பயிற்றுநர் ரமேஷ் உதவியுடன் நோயாளிகளுக்கு பயிற்றுவித்து வருகிறனர்.

  செய்தியாளர் : வெங்கடேசன்
  Published by:Vijay R
  First published: