ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் அலெர்ட்

தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் அலெர்ட்

இடி, மின்னலுடன் மழை

இடி, மின்னலுடன் மழை

அந்தமான் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னையை பொறுத்த வரையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுவடையும் என்பதால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் தேன்கனிக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் தலா 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தீபாவளி அன்று உருவாகிறது புதிய புயல்? - தமிழகத்தில் 25-ம் தேதிவரை கொட்டித்தீர்க்கப்போகும் மழை!

    இந்நிலையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்த வரையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: Rain Update, Weather News in Tamil