ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி : கடலூர், திருச்சி, கோவை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி : கடலூர், திருச்சி, கோவை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி காரணமாக, தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி காரணமாக 17-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரிசேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிநாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள்  உள்ளிட்ட 27 மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி காரணமாக, தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி காரணமாக 17-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை: 17.10.2022:  லட்ச தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: Heavy rain, Weather News in Tamil