ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கப்போகும் மழை : வானிலை மையம் கொடுத்த புதிய அலெர்ட்

இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கப்போகும் மழை : வானிலை மையம் கொடுத்த புதிய அலெர்ட்

இடி, மின்னலுடன் மழை

இடி, மின்னலுடன் மழை

தமிழகத்திற்கு அடுத்த 1 முதல் 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில்  பல்வேறு பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 1 முதல் 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

    அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மிதமான இடியுடன் கூடிய மழை அல்லது மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க... தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம்

    மேலும் தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஓரிரு மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: Rain updates, Weather News in Tamil