ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கேற்ற 23 பேர் விடுதலை - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2017.ஆம் ஆண்டு ஜல்லிகட்டு நடத்த அனுமதி கோரி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதே போல் அலங்காநல்லூரர், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் செல்லூரில் ரெயிலை மறித்து போராட்டம் நடத்திய 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் போராட்டத்தில் ஈடுப்பேற்ற 23 பேரையும் மதுரை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்...
சிவகாசி அருகே கொத்தநேரி பகுதியில் கருப்பையா என்பவருக்கு சொந்தமான வீட்டை பழுது பார்க்கும் பணியின்போது வீடு இடிந்து விழுந்ததில் அஜித் குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஜித் குமார் மருத்துவமனையில் உயிரிழந்தார்..
தமிழ் சொற்கள் குறித்த சந்தேகம் இருப்பவர்கள் 14469 என்ற இலவச தொலைபேசி எண்ற்கு தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துகொள்ளலாம்..
தமிழக சட்டபேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை கொள்கை குறிப்பில் சொற்குவை கட்டணமில்லா அழைப்பு மையம் அமைக்கபட்டு இருக்கிறது, பொதுமக்கள் 14469 என்ற இலவச தொலைபேசி எண்ற்கு தொடர்பு கொள்ளாம் எனவும் இவை காலை 10 மணி முதல் 5.30 மணி வரை செயல்பட்டு வருவதாகவும், தமிழ்ச்சொற்கள் குறித்த சந்தேககங்களுக்கு விடை அறியலாம் மேலும் ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களுக்கும் விடை அறியலாமென தமிழ் வளர்ச்சி கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்துறையில் வேகமாக முன்னேறி வருகிறது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தொழில் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி, தமிழக அரசு கடந்த ஆட்சியை முதலீடுகள் தொடர்பாக காகித கப்பல் என்று குறிப்பிட்டுப் பேசியது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பத்தாண்டுகளில் செய்யாததை 10 மாதங்களில் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 65 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீட்டில் போடப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் தொழில்துறை துறை வேகமாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டார்.
தொழில் துறையின் பயன் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றி வருவதாகவும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு என்று பத்திரிக்கைகள் தலையரங்கங்களில் பாராட்டு தெரிவித்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.
தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் / உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 436 பயனற்ற பழைய கல் குவாரிகளை மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்றி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
- தொழில்துறை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
பிற மொழியினர் தமிழ் மொழியை கற்க ஏதுவாக தமிழ் கற்பிக்கும் செயலி
சட்டபேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் வெளியிடபட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் அயல் நாட்டவர்கள், அண்டை மாநிலத்தவர்கள், தமிழ் தெரியாதவர்கள், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளிலும் உலக பொது மொழியான அங்கில மொழி தெரிந்தவர்கள், தமிழ் மொழியை சுலபமாக கற்றுகொள்ளவதற்காக பாட நூல்களையும், பன்மொழி அகராதிகளையும் உள்ளடக்கிய திறன்மிகு குறுஞ்செயலி உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ் வளர்ச்சி கொள்கைவிளக்க குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது....
உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேஜிஸ்ட்ரேட் காவல் நிலையத்திலும், மருத்துவமனையிலும் நேரில் விசாரணை நடத்த உள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ளி தனியார் பள்ளிகள் ஜூன் மாதத்தில் ஒரு வாரம் பள்ளிகளை மூடி போராட்டம் நடைபெற உள்ளதாக தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.