Latest Tamil News : தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் , உள்ளூர் செய்திகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்ஸ்
தமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல் (Assembly election 2021 ) இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் கள செய்திகள், கொரோனா பரவல் (CoronaVirus), தடுப்பூசி (Corona vaccine ) உள்ளிட்ட அப்டேட்கள், மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகள் தேர்தல் பிரசாரங்கள், தேசிய, உலக நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் இங்கே அறியலாம்.
திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகின்றது. திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்படுகின்றது - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
10:21 (IST)
தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன்,கே.பாலச்சந்தருக்கு பிறகு நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகின்றது.
10:9 (IST)
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
10:6 (IST)
நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு,மரணம் கிடு கிடு உயர்வு
மஹாராஷ்டிராவில் மட்டும் புதிதாக 39,544 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 459 பேர் கொரோனாவால் மரணம்
கடந்த 24 நான்கு மணி நேரத்தில் 72,330 பேர் கொரோனாவால் பாதிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்
9:41 (IST)
முட்டை விலை ரூபாய் 10 பைசா உயர்ந்து ரூ 4.00 க்கு விற்பனை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விலை நிர்ணயம்
9:40 (IST)
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சுங்க சாவடியில் 5 ரூபாய் முதல் 35 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.இலகுரக 4 சக்கர வாகனங்களுக்கு 100 ரூபாயாக இருந்த கட்டணம் 105 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது
9:40 (IST)
தஞ்சாவூர் ஆக்சிலியம் மேல்நிலைப்பள்ளி 8 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 230 பள்ளி மாணவர்களில் 203 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு.
9:39 (IST)
தென் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால் தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள சென்னை முதல் வேலூர் வரையிலான 20 மாவட்டங்களுக்கு அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்
9:35 (IST)
50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் அந்த மான் தென் வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
9:34 (IST)
தென் வங்கக்கடலில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.தென் வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லக்கூடிய மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல் (Assembly election 2021 ) இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் கள செய்திகள், கொரோனா பரவல் (CoronaVirus), தடுப்பூசி (Corona vaccine ) உள்ளிட்ட அப்டேட்கள், மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகள் தேர்தல் பிரசாரங்கள், தேசிய, உலக நிகழ்வுகள் , உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் இங்கே அறியலாம்.