Latest Tamil News: நடிகர் விஜய்யின் 65வது படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | June 21, 2021, 18:29 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 4 MONTHS AGO

  AUTO-REFRESH

  18:28 (IST)

  நடிகர் விஜய்யின் 65வது படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...‘BEAST’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  17:19 (IST)


  பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால பணப்பயன்களை குறைத்து பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  17:17 (IST)


  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் துவங்கியது.

  15:57 (IST)

  பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

  ஜம்மு&காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபூரின் குண்ட் பிராத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று இரவு முதல் தேடுதல் வேட்டை தொடங்கியது. அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பாதுகாப்புபடையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதியான, முதாசீர் பண்டித் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். கடந்த மார்ச் மாதம் சோபூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி மற்றும் 2 பாஜக கவுன்சிலர்கள் கொல்லப்பட்டது போன்ற, பல்வேறு தாக்குதலில் முதாசீருக்கு தொடர்பு உள்ளதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  15:56 (IST)

  'சசிகலாவை வேஸ்ட் லக்கேஜ்' -  முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்து  அமமுக கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பு

  சசிகலாவை வேஸ்ட் லக்கேஜ் எனக் கூறியதை கண்டித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை அமமுக கட்சித் தொண்டர்கள் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் நத்தம் எம்எல்ஏ-வுமான நத்தம் விஸ்வநாதன், சசிகலாலை தாய் அல்ல பேய் என்றும், அவர் ஒரு வேஸ்ட் லக்கேஜ் என்றும் விமர்சித்தார். அதைக் கண்டித்து நத்தம் பேருந்து நிலையம் அருகே விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  15:45 (IST)

  பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறைகளில் இருந்து பாதுகாக்க வழிகாட்டுதல் வெளியீடு

  15:41 (IST)

  பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணைய வழி வகுப்புகான நெறிமுறைகள் வெளியீடு : 

  மாநில அளவிலான கட்டுப்பாட்டுத் அறையை பள்ளி கல்வித் துறை உருவாக்கும். அதில் அனைத்து தரப்பினரும்  கட்டணமில்லா எண் மூலம் குறைகளை தெரிவிக்கலாம். இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகளையும் வெளியிட்டது பள்ளி கல்வித்துறை. 

  15:29 (IST)

  தமிழகத்தில் இதுவரை 1.13 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது - தமிழக அரசு தகவல் 

  ஜூன் 17 வரை மத்திய அரசிடம் பெற்ற 1,18,17,690 டோஸ்கள் தடுப்பூசிகளில், 1,12,88,648
  டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் 66 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  14:20 (IST)

  தேங்காய் நார் தயாரிக்கும் ஆலையில் தீவிபத்து

  தஞ்சாவூர் சூரக்கோட்டை அருகே சைதாம்பாள்புரத்தில் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன். இந்த தொழிற்சாலையை ஆலங்குடியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று திடீர் தீவிபத்து நேரிட்டது. தீயை அணைக்க தொழிலாளர்கள் போராடினர் எனினும் தீ வேகமாக பரவியது. இதையடுத்து தஞ்சாவூரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  14:20 (IST)

   தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு

   வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செய்திக் குறிப்பில், நீலகிரி, கோவை மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், 24ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். 25ம் தேதியன்று, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.