Latest News in Tamil : தாராபுரத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி உரை

Today News Tamil - Live Updates: தமிழ்நாடு , புதுச்சேரி தேர்தல் கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், கொரோனா அப்டேட் உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | March 30, 2021, 17:10 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 2 YEARS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  18:40 (IST)

  கூட்டத்திற்கு குவாட்டர், பிரியாணி தர மாட்டோம்.2 பேர் இருந்தாலும் தேர்தல் பிரச்சாரம் செய்வேன்.திறமை இருந்த காரணத்தினால் தான் கிரிக்கெட் வீரர் நடராஜன் வெளியே தெரிந்தார்.அதே போன்று தான் எங்களிடம் திறமை உள்ளது வாய்ப்பு கொடுங்கள்.ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தயவு செய்து வாங்க வேண்டாம். காலில் விழுந்து கேட்கிறேன் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  18:39 (IST)

  அரியலூர் சின்னகடை தெருவில் உள்ள தண்டபாணி  நகைக் கடையில் மாலை 4.30 மணி அளவில் 2 வாகனங்களில் 7 பேர் கொண்ட வருமானவரித்துறையினர் திடீரென உள்ளே புகுந்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.நகையின் இருப்பு - விற்பனை எவ்வளவு - ரொக்க இருப்பு உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டுள்ளனர்

  18:28 (IST)

  தமிழகத்திற்கு வந்த பிரதமர் வழக்கம் போல் பொய் பேசி சென்றுள்ளார் - திமுக தலைவர் ஸ்டாலின் 

  18:19 (IST)

  அதிமுகவினர் 10 லட்சம் கோடியை திருடி விட்டதாக ஸ்டாலின் சொல்கிறார். பதிலுக்கு திமுகவினர் 20 லட்சம் கோடியை திருடி விட்டதாக அதிமுகவினர் சொல்கின்றனர். 40 ஆண்டுகள் நேர்மையாக வாழ்ந்து உள்ளேன். எனவே, முடிந்தால் என் மீது ரெய்டு விட்டுப்பாருங்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  18:13 (IST)

  புதுச்சேரியின் ஆன்மீக பலத்திற்கு பெருமை சேர்ப்போம். உலகம் முழுவதும் உள்ள மக்களை இங்கு வரவைப்போம். காரைக்கால் மாவட்டத்தை காங்கிரஸ் அரசு புறக்கணித்து விட்டது. அங்கு சுற்றுலா திட்டங்களை கொண்டு வருவோம். புதுச்சேரி என்றால் மகாகவி பாரதி,சித்தானந்த சுவாமிகள்,மணக்குள விநாயகர் கோயில்,தொல்லை காத்து சித்தர் போன்றவர்கள் ஞாபகம் வருகிறது என பிரதமர் மோடி புதுச்சேரியில் பிரச்சார மேடையில் தெரிவித்துள்ளார்.

  17:52 (IST)

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  சென்னையில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

  17:16 (IST)

  புதுச்சேரி  வந்தடைந்தார் பிரதமர் மோடி. கூட்டணி கட்சிகளுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றார் 

  17:5 (IST)

  அதிமுகவினர் பணம் பட்டுவாடா. இருவர் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யும்போது திமுகவினர் கையும் களமாக பிடித்தனர். 

  தமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல் (Assembly election 2021 ) இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் கள செய்திகள், கொரோனா பரவல் (CoronaVirus), தடுப்பூசி (Corona vaccine ) உள்ளிட்ட அப்டேட்கள், மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகள் தேர்தல் பிரசாரங்கள், தேசிய, உலக நிகழ்வுகள் , உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் இங்கே அறியலாம்.