Breaking News Today: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Latest Tamil News Live Update | இன்றைய (26-04-2022) முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழ் உடன் இணைந்திருங்கள்..

  • News18 Tamil
  • | April 26, 2022, 16:57 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    16:52 (IST)

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 


    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (TASMAC) 6715 மேற்பார்வையாளர்கள் 15,000 விற்பனையாளர்கள் மற்றும் 3090 உதவி விற்பனையாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஏப்ரல் முதல் ரூ.500 உயர்த்தி தரப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    13:7 (IST)

    கிணற்றில் தவறி விழுந்து மான் உயிரிழப்பு

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் உயிரிழப்பு.

    12:49 (IST)

    தமிழகத்தில் வெளுத்து வாங்க இருக்கும் மழை!

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,  

    26.04.2022:  கன்னியாகுமரி,  திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, நாமக்கல்,  டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

    27.04.2022:  கன்னியாகுமரி,  திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்,  ராமநாதபுரம்  மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

    12:30 (IST)

    மகனை கொன்று வாய்க்காலில் வீசிய தந்தை..

    திங்களூர் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் பெரியசாமி கடந்த 19ஆம் தேதி இரவு குடிக்க பணம் கேட்டு தந்தை காளியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில் கோபமடைந்த தந்தை காளியண்ணன் மகன் பெரியசாமியை அடித்துக் கொன்று வாய்க்காலில் வீசி விட்டு மகனை காணவில்லை என நாடகமாடிய நிலையில் போலீசார் விசாரணையில் தந்தையே மகனை கொலை செய்தது தெரியவந்தது. எனவே, திங்களூர் போலீசார் தந்தை காளியப்பனை கைது செய்தனர்.

    12:27 (IST)

    கோடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபா தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மாவட்ட நீதிபதிகள் 53 பேரை இடம் மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தனபால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உதகமண்டலம் நீதிமன்றத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபா தேனி மாவட்ட முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளளார்.

    சென்னை தொழில்துறை தீர்பாய தலைமை அதிகாரியாக இருந்த முருகன் உதகமண்டலம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    11:34 (IST)

    சென்னை IIT-யில் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி 

    11:30 (IST)

    பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து

    சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் ரயில் ஓட்டுனர் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக  விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கவனக்குறைவாக இருந்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஓட்டுனர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் விசாரணை அறிக்கைக்கு பின்பு ஓட்டுநர் பவித்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தகவல்.

    விபத்து ஏற்பட்டபோது பிரேக் பிடிக்கவில்லை என தவறுதலாக ரயிலை இயக்கியதாக ஓட்டுனர் பவித்திரன் தெரிவித்ததாகவும், ஆனால் விசாரணையில் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை தவறுதலாக அழுத்தியது தெரியவந்திருப்பதாக ரயில்வே போலீசார் தகவல்.

    11:27 (IST)

    டெல்டா மாவட்டங்களில் 6 அரிசி ஆலைகள் அமைக்கப்படும் - அமைச்சர் சக்ரபாணி 

    தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட மரத்துறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். 

    இதற்கு பதிலளித்து பேசிய உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் 6 அரசி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தஞ்சையிலும் ஒரு அதி நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    11:26 (IST)

    எவ்வளவு செலவு ஆனாலும் கடல் நீர் உட்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன் 

    நாகை மாவட்டத்தில் பொய்கைநல்லூர் கிராமத்தில் தடுப்பனை கட்டப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரை முருகன் கடலோர மாவட்டங்களில் 36 இடங்களின் கடல் நீர் உட்புகுவதால் குடிநீர் பிரச்சினை, கால்நடைகள் தண்ணீர் குடிக்க முடியாத அளவிற்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது. இதனை தடுக்கும் விதமாக ஐந்து இடங்களில் தடுப்பணை பணிகள் நிறைவடைந்துள்ளன. 11 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இதே போல மீதமுள்ள இடங்களில் மாநில மற்றும் ஆசிய வங்கி நிதி உதவி திட்டம் மூலம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் முக்கியமான பிரச்சனை என்பதால் எவ்வளவு செலவானாலும் தடுத்து நிறுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவையில் தெரிவித்தார்.

    10:23 (IST)

    டெல்டா மாவட்டங்களில் காகிதத் தொழிற்சாலை அமைக்க முடியாது - அமைச்சர் தங்கம் தென்னரசு

    திருவாரூர் மாவட்டத்தில் வைக்கோலை மூலப்பொருளாகப் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் தொழிற்ச்சாலை அமைக்கப்படுமா என திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணர் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக ரீதியாக வைக்கோல் தயாரிப்பது கடினம் ,மேலும் அதனை சேமித்து வைக்க அதிகமான இடம் தேவைப்படும், மேலும் மண் கலந்து வருவதால் காகிதம் தயாரிக்கும் இயந்திரங்கள் பழுது ஏற்படும்,மேலும் காகித தொழிற்சாலை red+ வகை பிரிவை சார்ந்தது எனவே டெல்டா மாவட்டத்தில் அமைக்க இயலாது என்று தெரிவித்தார்.