Breaking News Today: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் - புதுச்சேரி அரசு அறிவிப்பு

Latest Tamil News Live Update | இன்றைய (27-04-2022) முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழ் உடன் இணைந்திருங்கள்..

  • News18 Tamil
  • | April 27, 2022, 20:12 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 24 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    20:9 (IST)

    புதுச்சேரியில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு.. கொரோனா காரணமாக மாணவர்கள் பல மாதங்களாக நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாததால் புதுச்சேரி கல்வித்துறை  நடவடிக்கை

    18:9 (IST)

    தஞ்சையில் சப்பரம் விபத்து பகுதியில் முதல்வர் நேரில் ஆய்வு

    17:47 (IST)

    மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் வருகை.

    தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் நடைபெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

    17:37 (IST)

    தஞ்சை தேர் விபத்து நடந்த பகுதியில் முதல்வர் ஆய்வு

    16:26 (IST)

    தஞ்சாவூரில் முதல்வர்..

    தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் அஞ்சலி.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

    16:25 (IST)

    மருத்துவமனை தீ விபத்து - சிலிண்டர் வெடிப்பு காட்சிகள் வெளியீடு

    15:56 (IST)

    #BREAKING ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்கு தீயணைப்பு துறை அனுமதி வாங்கவில்லை என தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில், மருத்துவமனைகளில் பின்பற்றப்பட வேண்டிய தீயணைப்பு துறை விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தீ விபத்து ஏற்பட்ட அறையில் அளவுக்கு அதிகமான உபகரணங்கள் வைக்கப்பட்டிருப்பதால் தீ எளிதில் அதிகளவில் பரவி இருந்தாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல்.

    முகக் கவசம், அறுவை சிகிச்சைக்கு தேவையான கையுறைகள் போன்ற எளிதில் தீ பிடிக்க கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் இருந்ததால் தீ வேகமாக பரவியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் 110 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.

    15:43 (IST)

    தென்காசி மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு அன்று ஒருநாள் மதுக்கடைகள் மூடல் 

    மே தினம் 01.05.2022 (ஞாயிறு) அன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக்கடைகள் அதனுடன் இணைந்து செயல்படும் மதுபானக் கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்து செயல்படும் மதுபானக் கூடங்கள் (FL 1,FL2. FL3, FL3A, FL3AA, FL11) அனைத்தும் மூடப்படும் என்றும், அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது எனவும்  மாவட்ட ஆட்சியர் திரு.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்..

    15:42 (IST)

    தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.

    கிராம நிர்வாக அலுவலர் தீபா மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பட்டா மாறுதலுக்கு ரூ.13 ஆயிரம் லஞ்சம் பணம் பெற்ற நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

    13:53 (IST)

    சென்னை புது வண்ணாரப்பேட்டை: நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் சாலையில் குடுமிசண்டை போட்ட 10 கல்லூரி மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

    சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் கல்லூரி மாணவிகள் நேற்று புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோவில் பேருந்து நிலையத்தில் குடுமிப்பிடி சண்டை போட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் சுடர்கொடி சண்டையில் ஈடுபட்ட பத்து மாணவிகளை தற்காலிகமாக பத்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்