Breaking News Today: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு

Latest Tamil News Live Update | இன்றைய (25-04-2022) முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழ் உடன் இணைந்திருங்கள்..

 • News18 Tamil
 • | April 26, 2022, 09:36 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A MONTH AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  14:40 (IST)

  தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு

  14:36 (IST)

  சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தன மரத்துண்டுகள் பறிமுதல்..

  திருச்சி மாவட்டம் துறையூர் T.பாதர் பேட்டை கிராமத்தில் உள்ள ஜெயராமன் என்பவரது தோட்டத்தில் சட்டவிரோதமாக சந்தன மரத்துண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் வனத்துறையினர் சோதனை செய்ததில் 22.46 கிலோ எடை கொண்ட சந்தன மரத்துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு ரூ.50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

  14:31 (IST)

  விமான நிலைய இயக்குநர் பதில் அளிக்க உத்தரவு..

  தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த 2019 ம் ஆண்டு பாஜக முன்னாள் மாநில தலைவரும், தற்போதைய புதுச்சேரி ஆளுநருமான தமிழிசையுடன் வாக்குவாதம் செய்த, ஆராய்ச்சி மாணவி சோபியா மீது  தூத்துக்குடி   புதுக்கோட்டை  போலீசாரால் பதிவு செய்யப் பட்ட  வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணையில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜீன் 19ம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

  14:30 (IST)

  மதுரை கூடல் நகரில் சரக்கு ரயில் தடம்புரண்டது...

  கூடல் நகரில் இருந்து வாடிப்பட்டியில் உள்ள டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்திற்கு டிராக்டர் ஏற்ற சென்ற ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்து. சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

  14:24 (IST)

  சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு

  13:29 (IST)

  பப்ஜி மதனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்..

  மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியது உள்ளிட்ட குற்றசாட்டில் மதன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற பப்ஜி மதன் தாக்கல் செய்த  ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நக்கீரன் அமர்வு குன்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது அளித்த கோரிக்கை உரிய காலத்தில் காவல்துறை பரிசீலிக்கவில்லை என கூறி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு எதிரான சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

  13:6 (IST)
  13:5 (IST)

  அமைச்சர் உறுப்பினரை கடுமையாக விமர்சிக்கிறார், முதலமைச்சர் அமைச்சரை கட்டுபடுத்தாமல் ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார், இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்றார் கே.பி.முனுசாமி.

  13:4 (IST)

  சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப திமுக இரட்டை வேடம் போடுகிறது - எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம்

  சட்டப்பேரவை நடவடிக்கையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து
  பேச முற்பட்ட போது அமைச்சர் பெரியகருப்பணன் மரியாதை குறைவாக உட்காருடா என ஒருமையில் பேசினார், அமைச்சர் பெரியகருப்பண் பேச்சை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

  பல்கலைகழக திருத்த சட்ட மசோதா குறித்து பல்வேறு கட்டங்களில் பல்வேறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது, சட்டம் இயற்றப்படவில்லை 

  சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப திமுக இரட்டை வேடம் போடுகிறதாக கூறிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது, அதற்குட்பட்டு தான் ஆளுநரும் செயல்பட முடியும் என்றார்.

  13:2 (IST)

  தட்பவெப்பநிலையைத் தாங்கும் பசுமை கோயில்களாக மதுரை மற்றும் சென்னையில் தலா ஒன்று என இரண்டு கோயில்களில் முன்னோடி திட்டமாக எடுத்துக்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.