கருணாநிதி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பிரசாரம்

படுகர் இனத்தவர்கள் நடனமாடி எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். பின்னர் படுகர் இனத்தவரின் பாரம்பரிய உடையணிந்து முதல்வர் பேசினார்.

கருணாநிதி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பிரசாரம்
கருணாநிதி | எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: April 8, 2019, 5:21 PM IST
  • Share this:
“திமுக தலைவர் கருணாநிதிக்கு ஏன் வெளிநாட்டில் சிகிச்சை வழங்கப்பட வில்லை?” என்று குன்னூரில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தியாகராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று குன்னூர் மற்றும் உதகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

படுகர் இனத்தவர்கள் நடனமாடி எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். பின்னர் படுகர் இனத்தவரின் பாரம்பரிய உடையணிந்து முதல்வர் பேசினார்.


ஜெயலலிதா இருந்தபோது நீலகிரி மாவட்டத்தை சொந்த மாவட்டமாக கருதி அனைத்தையும் செய்தார் என்றும் அதுபோலவே அதிமுகவும் முக்கியத்துவம் கொடுத்து முக்கிய திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் கூறினார்.

அதிமுகவை ஊழல் அரசு என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், நீலகிரி தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் ஊழலால் சிறைக்கே சென்றவர் என விமர்சித்தார்.

படிக்க... வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - தமிழகத்தில் முதல் கைதுமக்களை பற்றி சிந்திக்காத வேட்பாளர் ஆ.ராசாவுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

திமுக தலைவர் தனது பிரசாரத்தில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று பல இடங்களில் பேசிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி கருணாநிதி மரணத்தை கையில் எடுத்துள்ளார்.

படிக்க... சிக்கியது உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு: காதலனால் மாட்டிக்கொண்ட பரிதாபம்!

“கருணாநிதி நன்றாக இருந்தால், தான் தலைவராக முடியாது என எண்ணி அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் 2 ஆண்டுகள் வீட்டிலையே சிறைவைத்தவர் ஸ்டாலின்.

கலைஞருக்கு ஏன் பேசமுடியாமல் போனது? கலைஞரை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்றால் அவர் குணமாகி இருப்பார் என்பதை அவரது கட்சி காரர்களே கூறுகின்றனர்.

முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில், வீட்டு சிறையில் கருணாநிதி வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும். அவருக்கு சில கொடுமைகள் நடந்துள்ளதாக தகவல்கள் வருகிறது, இதனை விசாரிக்க வேண்டியது அரசின் கடமை” என்று எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பிரசாரம் செய்துள்ளார்.

Also See...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்