Home /News /tamil-nadu /

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை டிச.16-ல் திறப்பு

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை டிச.16-ல் திறப்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி

அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திருவள்ளூர் அருகே தயாரானது.

தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் முழு உருவச்சிலை  டிசம்பர் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திமுக செயற்குழுவில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை அருகே, கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அங்கு ஏற்கனவே உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிதாக பெரிய பீடம் அமைத்து அறிஞர் அண்ணா, கருணாநிதி மற்றும் திருவள்ளுவர் சிலைகளை ஒன்றாக நிறுவப்பட இருக்கிறது.

இதற்காக பேரறிஞர் அண்ணாவின் சிலை ராட்சத கிரேன் கொண்டு அகற்றம் செய்யப்பட்டது. விரைவில் புதிய பீடம் அமைக்கப்பட்டு பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட உள்ளது.

நிறுவப்படும் புதிய சிலை திறப்பு விழா வருகிற டிசம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வருகிற 22-ம் தேதி டெல்லி செல்லும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நேரில் அழைப்பு விடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Also See..

Published by:Sankar
First published:

Tags: DMK, Karunanidhi statue, MK Stalin

அடுத்த செய்தி