• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று! சிலை திறக்கிறார் மம்தா...

கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று! சிலை திறக்கிறார் மம்தா...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைதிப்பேரணி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைதிப்பேரணி

முதலாம் நினைவு தினத்தை ஒட்டி, கோடம்பாக்கத்தில் உள்ள திமுக அதிகாரப்பூர்வ இதழான முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை இன்று திறக்கப்பட உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் அக்கட்சியினர் அவரின் நினைவிடம் நோக்கி அமைதி ஊர்வலம் செல்கின்றனர். மாலையில் முரசொலி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கவுள்ளார்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, காலை 8 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து திமுகவினர் அமைதி ஊர்வலமாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் மாநிலம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

முதலாம் நினைவு தினத்தை ஒட்டி, கோடம்பாக்கத்தில் உள்ள திமுக அதிகாரப்பூர்வ இதழான முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைக்கிறார்.

கருணாநிதியின் நினைவிடம்


இதில், பங்கேற்க சென்னை வந்த மம்தா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதி சிலை திறப்புக்காக தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

மேலும், மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் தலைவர்கள் அனைவரும்  கருணாநிதியின் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க... காஷ்மீர் விவகாரம்! தமிழக தலைவர்கள் கருத்து என்ன?





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: