ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெல்லை கல்குவாரி விபத்து.. பாறை இடுக்குகளில் இருந்து லாரி கிளீனர் முருகன் சடலமாக மீட்பு.. தொடரும் சோகம்

நெல்லை கல்குவாரி விபத்து.. பாறை இடுக்குகளில் இருந்து லாரி கிளீனர் முருகன் சடலமாக மீட்பு.. தொடரும் சோகம்

நெல்லை கல்குவாரி  விபத்து

நெல்லை கல்குவாரி விபத்து

Tirunelveli : நெல்லை கல்குவாரியில் சனிக்கிழமை நடந்த நிலச்சரிவு விபத்தில் சிக்கிய ஆறு பேரில் 3 பேர் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில் நேற்று இரவு லாரி கிளீனர் முருகன் பாறை இடுக்குகளில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் சடலமாக மீட்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில்  நடந்த நிலச்சரிவு விபத்தில் சிக்கிய ஆறு பேரில் 3 பேர் ஏற்கனவே  மீட்கப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் முடிவில் நான்காவது நபர் லாரி கிளீனர் முருகன் பாறை இடுக்குகளில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினரால் சடலமாக மீட்கப்பட்டார்.

பாளையங்கோட்டை வட்டம்,  அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 6 தொழிலாளர்கள், பாறை குவியலுக்குள் சிக்கி கொண்டனர். ஞாயிறன்று காலை முருகன், விஜய் என 2 தொழிலாளர்கள்  குவாரியில் இருந்து பத்திரமாக தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  ஞாயிறு அன்று மாலையில் மீட்கப்பட்ட மூன்றாம் நபர் செல்வம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் கல்குவாரியில் சிக்கியுள்ள மற்ற 3 பேரை மீட்பதற்காக, அரக்கோணத்தில் இருந்து நெல்லை வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், லெப்டினன்ட் கமாண்டர் சுதாகர்  தலைமையில் 30 பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து கல்குவாரியில் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். 48மணி நேரப் போராட்டத்திற்குபின் இரண்டாம் நாள் இரவு 11 மணியளவில் 4 வது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

பாறை நிலச்சரிவில் சிக்கிய ஆறு பேரில் கிட்டாச்சி ஆபரேட்டர்கள்  முருகன், விஜய்  செல்வம் என 3 பேர் ஞாயிற்றுக்கிழமை வரை மீட்கப்பட்டிருந்தனர். குவாரியில் சிக்கியிருக்கும் லாரி ஓட்டுனர்கள் செல்வகுமார்,  ராஜேந்திரன் மற்றும்லாரி கிளீனர் முருகன் என 3 நபர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை தீவிரமாக முயன்று வந்தனர்.

இந்தநிலையில் 48 மணி நேர போராட்டத்திற்கு பின், நான்காவதாக சடலமாக மீட்கப்பட்ட முருகன்,  நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். மீட்கப்பட்ட அவரின் உடலைப் பார்த்து உறவினர்கள் முருகன் என உறுதி செய்த நிலையில், அவரின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து சேகம் நிலவுகிறது.

Must Read : பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்

முருகன் உடலை மீட்டதும், இரண்டாம் நாள் மீட்பு பணியை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிறுத்தி விட்டனர். இந்நிலையில், இன்று மீதமுள்ள ராஜேந்திரன் மற்றும் செல்வகுமார் என இரண்டு லாரி ஓட்டுநர்களை மீட்பதற்கான ஆய்வும் ஆலோசனை கூட்டமும் காலையில் ஆட்சியர் தலைமையில்  நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மீட்பு பணி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Accident, Death, Quarry, Tamil News, Tamilnadu, Thirunelveli